சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன் போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன் ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே