சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன் சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன் வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான் ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள் ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள் காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன் கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ