சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும் ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும் தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே