சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே திகழ்தனித் தந்தையே நின்பால் சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை செய்தருள் செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன் போரிட முடியா தினித்துய ரொடுநான் பொறுக்கலேன் அருள்கஇப் போதே சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி