சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங் காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும் போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே