சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத் தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே கட்டளைக் கலித்துறை