சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன் சிவபொருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின் பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர் வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன் ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே