சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள் வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப் பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப் பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே