சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம் பேர்சான்ற இன்பம் பெரிது
சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப் பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர் நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால் நீடும் படிநீ நிகழ்த்து