சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன் ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே