சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப் பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண் தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண் ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே