சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும் யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன் ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றிஅப்பா உன்இதழித் தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ