சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல் கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப் பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப் பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன் பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே