சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ் சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார் ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார் சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர் சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல் லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ