சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ அகமறிந்தீர்() அனகமறிந் தழியாத ஞான அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே () அகமறியீர் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க