சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூயநல் உடம்பினில் புகுந்தேம் இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புறக் கலந்தனம் அழியாப் பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப் பரிசுபெற் றிடுகபொற் சபையும் சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்கநின் சீரே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அழிவுறா அருள்வடிவப் பேறு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்