பாடல் எண் :1085
சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
சித்தம் என்னள வன்றது சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
நித்த னேஅது நீஅறி யாயோ
புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே
பாடல் எண் :4584
சுத்த சிவமய ஸோதி - என்னை
ஸோதி மணிமுடி சூட்டிய ஸோதி
சத்திய மாம்பெருஞ் ஸோதி - நானே
தானாகி ஆளத் தயவுசெய் ஸோதி
சிவசிவ சிவசிவ ஸோதி - சிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ ஸோதி
சிவசிவ சிவசிவ ஸோதி
--------------------------------------------------------------------------------
ஸோதியுள் ஸோதி
சிந்து
பல்லவி
பாடல் எண் :5058
சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5063
சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ
பாடல் எண் :5503
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.