சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும் தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய் நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில் தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே