சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல் துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம் இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில் நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர் சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி