சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய் கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய் அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ் மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே
சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார் வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம் அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே