சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத் தூயனை யாவரும் சொல்லரி யானைப் பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப் பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே