சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத் தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார் எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும் என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால் கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே