சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந் தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான் ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க் கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர் விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும் விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே