சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச் சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய் போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம் ஆது சொல்லுதல் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே