சூலப் படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம் சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார் நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான் சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே டீயஉம -------------------------------------------------------------------------------- சல்லாப வியன்மொழி திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்