சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத் தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப் போழும் வண்ணமே வடுகனுக் கருளும் பூத நாதர்நற் பூரணா னந்தர் தாமும் தன்மையோர் உயர்வுறச் செய்யும் தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம் வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம் மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே