சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம் சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத் தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம் வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும் அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி