சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும் துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின் வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும் உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன் தாழ்வி லாதசீர் தருவடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே