செங்கன்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார் எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார் அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன் இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே