செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர் சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே