செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென் னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ