செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே வெஞ்சொல் புகழும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே