செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன் வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ