செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோ வென்றே னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ