செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ மெய்கொள் புளகம் முடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ பொய்கொள் உலகோ டுடேனோ புவிமீ திருகால் மாடேனே