செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில் திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான் வைத போதினும் வாழ்த்தென நினைத்து மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய் கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே