செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல் திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ணீர்ப் பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன் மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால் எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே