செய்யானைக் கரியானைப் பசுமை யானைத் திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக் கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட கையானை என்னைஎன்றும் கையா தானை எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே