Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :173
செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
சைவ நாதனே தணிகை மன்னனே
பாடல் எண் :209
செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
வைவ துனைகனை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
உய்வ தனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.