செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள் திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன் எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன் ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே