செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலகவாழ்க்கையில் வரும்பொலா அணங்கே திருச்சிற்றம்பலம் நாள் அவத்து அலைசல் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்