செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர் வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே
செல்வந் தழைக்கு மருந்து - என்றுந் தீரா வினையெலாந் தீர்த்த மருந்து நல்வந் தனைகொள் மருந்து - பர நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து நல்ல