செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய் உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றிஅப்பா உன்வடிவம் இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ