சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே