சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா னோடார் கரத்தீ ரெண்டோ ள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ