சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ் மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே