சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில் தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன் தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன் ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே