சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே