சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந் நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால் வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ