சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக் காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்